அரசுப் பள்ளி வளாகங்களில் சிசிடிவி பொருத்த நடவடிக்கை வேண்டும் ; உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

0 2205
அரசுப் பள்ளி வளாகங்களில் சிசிடிவி பொருத்த நடவடிக்கை வேண்டும்

தமிழகத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளி வளாகங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த அரசு உரிய நடவடிக்கை வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமணஞ்சேரியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் சமூக விரோத செயல்களில் இருந்து பள்ளிக்கூடத்தை பாதுகாக்க உத்தரவிடக் கோரியும் வழக்கு தொடரப்பட்டது.

இதன் விசாரணையின்போது, அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பான முந்தைய உத்தரவுகளை நிறைவேற்ற இதுவரை எடுத்த நடவடிக்கை தொடர்பாக அறிக்கையளிக்க அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments