சென்னையில் ஒரே அறையில் தாய், 11 வயது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு.!

0 4209

சென்னை தாம்பரம் அருகே வீட்டிலுள்ள ஒரே அறையில் தாய் மற்றும் 11 வயது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வரதராஜபுரம் கிருஷ்ணா நகரை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் தனது மனைவி சுகாசினி மற்றும் 11 வயது மகன் பிரமித் ஆகியோர் வீட்டிலுள்ள ஒரே அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக மணிமங்கலம் போலிசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இருவரது மரணத்திலும் சந்தேகம் இருப்பதால் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பிரேம் குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments