நீர் மேலாண்மையில் தமிழ்நாட்டுக்கு 3ஆம் பரிசு.!

0 2364

நீர் மேலாண்மையில் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்களுக்கான முதல் பரிசை உத்தரப்பிரதேசமும், இரண்டாம் பரிசை ராஜஸ்தானும், மூன்றாம் பரிசைத் தமிழ்நாடும் பெற்றுள்ளன.

நீர்மேலாண்மையில் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்கள், மாவட்டங்கள், ஊராட்சிகள், அமைப்புகளுக்குத் தேசிய நீர் விருதுகள் வழங்கப்படுகின்றன. 2020ஆம் ஆண்டுக்கான விருதுகளை மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் இன்று அறிவித்தார்.

தென்மண்டலத்தில் சிறந்த ஊராட்சிக்கான இரண்டாம் பரிசு செங்கல்பட்டு மாவட்டம் வெள்ளப்புதூர் ஊராட்சிக்கும், சிறந்த நகர்ப்புற உள்ளாட்சிக்கான மூன்றாம் பரிசு மதுரை மாநகராட்சிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த பள்ளிக்கான முதல் பரிசு காவேரிப்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கும், சிறந்த தொழில் நிறுவனத்துக்கான இரண்டாம் பரிசு ஹுண்டாய் மோட்டார் நிறுவனத்துக்கும், சிறந்த அரசு சாரா அமைப்புக்கான விருது கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments