திருவொற்றியூரிலுள்ள தனியார் தொழிற்சாலையில் PSLV ராக்கெட்டுக்கான முக்கிய பாகம் தயாரிக்கப்பட்டு இஸ்ரோவிடம் ஒப்படைப்பு.!

0 3076

சென்னை திருவொற்றியூரிலுள்ள தனியார் தொழிற்சாலையில் PSLV ராக்கெட்டுக்கான முக்கிய பாகம் தயாரிக்கப்பட்டு இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு முதல்  இஸ்ரோவுக்காக PSLV ராக்கெட்டின் இடைநிலை பாகம் தயாரிக்கும் பணி சென்னை திருவொற்றியூரில் அமைந்திருக்கும் கேசிபி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு சோதனைக்கு பிறகு தமிழகத்தில் முதல் முறையாக ஒரு கோடி ரூபாய் செலவில் 700 கிலோ எடை கொண்ட PSLV  ராக்கெட்டின் இடைநிலை பாகம் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டது. பின்னர் அந்நிறுவனத்தின் தலைவர்  நாராயணன் ராவ் காணொலி காட்சி மூலம் அதனை இஸ்ரோவிடம் ஒப்படைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments