வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு

0 3431

வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு ஜனவரி 11ஆம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், வரும் ஞாயின்றன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்று தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெளியிடப்பட்ட ஹால் டிக்கெட்டைப் பயன்படுத்தி தேர்வர்கள் ஜனவரி 11ஆம் தேதி அதே தேர்வு மையத்தில் தேர்வை எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சனிக்கிழமையன்று நடைபெறவிருந்த கட்டடக்கலை பதவிகளுக்காக எழுத்துத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments