தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சட்டமசோதா பேரவையில் நிறைவேற்றம்.!

அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட மாநில அரசின் கட்டுப்பாடில் வரும் அதிகார அமைப்புகளிலுள்ள பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக நிரப்புவதற்கான சட்டமசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் இந்த மசோதாவை நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக ஆட்சேர்க்கையில் கிராமப்புற இளைஞர்களும் எளிதாக விண்ணப்பிக்க சட்டமுன்வடிவு வழி வகை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிகார அமைப்புகளில் எழும் காலி இடங்களை நிரப்புவதில் நிபுணத்துவத்தை பேணவும் சட்டமுன்வடிவு வழி வகை செய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments