பொங்கலை முன்னிட்டு புதுச்சேரி மக்களுக்கு பரிசுத் தொகுப்பு - முதலமைச்சர் ரங்கசாமி

0 5342
பொங்கலை முன்னிட்டு புதுச்சேரி மக்களுக்கு பரிசுத் தொகுப்பு - முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் திங்கட்கிழமை முதல் நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், பச்சரிசி, வெல்லம், திராட்சை, முந்திரி, துவரம்பருப்பு உள்ளிட்ட 10 பொருட்கள் அடங்கி 490 ரூபாய் மதிப்பிலான தொகுப்பு பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்றும் ரங்கசாமி குறிப்பிட்டார்.

இதனை அடுத்து, புதுச்சேரியில் வரும் 12ஆம் தேதி முதல் நடைபெற இருந்த தேசிய இளைஞர் திருவிழா கொரோனா தொற்று காரணமாக காணோலி மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், பிரதமரின் புதுச்சேரி வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments