ராணிப்பேட்டை நகராட்சி அலுவலக வளாகக் கிணற்றில் இருந்து பெண் சடலம் மீட்பு.!

0 2805

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சி அலுவலக  வளாகத்தில் உள்ள கிணற்றில் இருந்து பெண் ஒருவரின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அந்தப் பெண், 3 ஆண்டுகளுக்கு முன் நகராட்சியில் ஒப்பந்த பணியாளராக டெங்கு ஒழிப்பு பிரிவில்  பணிபுரிந்து வந்திருக்கிறார். 30 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்ற வேதனையில் அவர் இருந்ததாகவும் அதற்காக எடுக்கப்பட்ட சிகிச்சைகளால் கல்லீரல் பாதிக்கப்பட்டு உடல்நிலை மோசமாகி அவதிப்பட்டு வந்தார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் காலை நகராட்சி அலுவலகம் எதிரிலுள்ள கோவிலுக்குச் சென்ற அந்த பெண், அங்கு நீண்ட  நேரம் தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்தார் என்றும் கூறப்படும் நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments