பிரதமரின் பாதுகாப்புக் குறைபாடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை.!

பிரதமரின் பஞ்சாப் பயணத்துக்குச் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள், அவரது பயணத் திட்டம் தொடர்பான ஆவணங்களைப் பாதுகாத்து வைக்கும்படி பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றப் பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாபில் பிரதமருக்கு ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடு குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரமணா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பிரதமரின் பாதுகாப்புக் குறைபாடு பற்றி விசாரிக்க மத்திய மாநில அரசுகளால் அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் செயல்பாட்டைத் திங்கட்கிழமை வரை நிறுத்தி வைக்கும்படி அறிவுறுத்தினர்.
மாநில அரசு, காவல்துறை, மத்தியப் பாதுகாப்பு முகமைகள் ஆகியவற்றின் சார்பில் பிரதமருக்குச் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆவணங்களையும் பாதுகாக்கப் பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டனர்.
Comments