நாளை, நாளை மறுநாள் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

0 10669

டெல்டா மாவட்டங்கள் மற்றும் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்  மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனத் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், நாளை மற்றும் நாளை மறுநாள் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என்றும் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments