சென்னையில் தனியார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 27 பேருக்கு கொரோனா

0 26674

சென்னை எருக்கஞ்சேரியில் தனியார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எருக்கஞ்சேரி டீச்சர்ஸ் காலனி மறைமலை அடிகள் தெருவில் உள்ள செயின்ட் ஜோசஃப் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நேற்று முன் தினம் முதற்கட்டமாக 120 மாணவர்களுக்கும், இரண்டாம் கட்டமாக நேற்று 153 மாணவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

முதல்கட்ட பரிசோதனை முடிவுகள் வந்துள்ள நிலையில், அதில் 26 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த மாணவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் வேறு வகுப்பறைக்கு மாற்றப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments