மகாராஷ்டிரா மாநிலம் பிவண்டியில் உள்ள மர குடோனில் பயங்கர தீவிபத்து

0 1681

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிவண்டியில், மர குடோன் ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீயில் குடோன் முற்றிலும் எரிந்து நாசமடைந்திருப்பதுடன் உள்ளே இருந்த 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

படுகாயம் அடைந்த தொழிலாளர்கள் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments