புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்

0 7917

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரியில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தபட்டன.

அந்த வகையில், உணவங்கள், உடற்பயிற்சி கூடங்கள், சலூன், வணிக வளாகங்களில்  50% வாடிக்கையாளர்களுடன் இயங்கி வருகின்றன. முக்கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கபடுகின்றனர். 

கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி கல்வி நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, பள்ளி கல்லூரிகள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் செயல்படுகின்றன.

அதேபோல், வெளிமாநில பேருந்துகளில் 50% பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் வரும் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments