திருச்சியில் அடுத்தடுத்து மூன்று கடைகளின் பூட்டை உடைத்து கைவரிசை!

0 10178

திருச்சியில் அடுத்தடுத்து மூன்று கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தில்லைநகர் முதல் கிராசில் உள்ள மெடிக்கல் ஷாப், செல்போன் கடை, துணிக்கடை ஆகிய மூன்று கடைகளின் பூட்டுகள் நேற்று நள்ளிரவு உடைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது மூன்று மர்ம நபர்கள் செல்போன் கடையை உடைத்து உள்ளே நுழையும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்தன.

மருந்து கடையில் மட்டும் 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனதாக கூறப்படும் நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தில்லை நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments