வழிபாட்டு தளங்களுக்கு கட்டுப்பாடுகள்: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

0 2819

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் பொதுமக்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளிக்கிழமையையொட்டி கோயில்களின் முன்பு கூடிய பக்தர்கள் வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர்.

வெள்ளிக்கிழமையையொட்டி சென்னை வடபழனி முருகன் கோயில் முன்பு திரண்ட பக்தர்கள், வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மயிலாப்பூரிலுள்ள கபாலீஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முன்பு திரண்ட பக்தர்கள், உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் வெளியே நின்றி சாமி தரிசனம் செய்து சென்றனர்.

புதிய கட்டுப்பாடுகள் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வீரராகவ பெருமாள் கோவில் மற்றும் திருத்தணி முருகன் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபட தடைவிதிக்கப்பட்டுள்ளதால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் கோபுர வாசலில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மூடப்பட்டுள்ள நிலையில், வாசலில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் நேரடி தரிசனத்திற்குத் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் கோயிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர்.

வார இறுதி நாட்களில் வழிபாட்டுத்தலங்களில் சுவாமி தரிசனம் செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், ராமேஸ்வரம் வந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வெளியே கிழக்கு கோபுர வாசலில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 

தஞ்சை பெரியகோவிலில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்பட்டு காவல்துறையினர் பாதுகப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். கோவிலுக்கு வந்த பக்தர்கள் நுழைவு வாயிலில் நின்று வழிப்பட்டு சென்றனர்.

நெல்லை மாவட்டத்தின் பிரசித்திபெற்ற பாபநாசம் பாபநாசர் கோவில் மற்றும் மேற்க்குத்தொடர்ச்சி மலையிலுள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், வெளியே நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

கோவை தண்டு மாரியம்மன் கோவில், ஈச்சனாரி விநாயகர் கோயில், மருதமலை முருகன் கோவில், புலியகுளம் விநாயகர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் மூடப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் கோவில் வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர்.

தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் காரணமாக வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் நாகூர் தர்கா மூடப்பட்டது. நாகூர் தர்காவில் கந்தூரி விழாவிற்கு வருகை தந்த பக்தர்கள் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments