பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை ஆசிரியர் கைது

0 4089

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தேடப்பட்டு வந்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

திசையன்விளையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு ஸ்பெஷல் கிளாஸ் எடுப்பதாகக் கூறி, அப்பள்ளியின் தலைமையாசரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் ஒரு மாணவிக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

மாணவிகள் அளித்த புகாரின் பேரில், பள்ளி நிர்வாகம் தலைமை ஆசிரியரை பணி நீக்கம் செய்ததையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த திசையன்விளை போலீசார், தலைமறைவான கிறிஸ்டோபரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில், நாங்குநேரி அருகே விஜயநாராயணம் பகுதியில் பதுங்கியிருந்த கிறிஸ்டோபர் ஜெபகுமாரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments