உலக அளவில் 30 கோடியைத் தாண்டிய கொரோனா பாதிப்பு

0 2416

உலக அளவிலான கொரோனா பாதிப்பு 30 கோடியை தாண்டியது. கடந்த ஒரு நாளில் 25 லட்சம் பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக அமெரிக்காவில் ஆறரை லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்கியது.

ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டனில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டி பரவுகிறது. தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து கடந்தது. பிரேசிலில், கொலம்பியா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளிலும் கடும் பாதிப்பு நீடித்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments