தேனியில் விதிமீறல்கள் உள்ளதாக கூறி ரூ.10,000 லஞ்சம் பெற்ற உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரி கைது

0 5447

தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

நகராட்சி அலுவலகம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரி சண்முகம், விதிமீறல்கள் உள்ளதாக கூறி வியாபாரிகளிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாயை சண்முகம் பெற்ற போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments