திருவண்ணாமலை சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ விபத்து.. உடனடியாக வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்ப்பு.!

0 2381

திருவண்ணாமலை, வேட்டவலம் சாலையில் சென்று கொண்டிருந்த விலை உயர்ந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.

சென்னையை சேர்ந்த சையத் என்பவர் தனது விலை உயர்ந்த காரில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு தொடர்ந்து 4 மணி நேரம் காரை இயக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு வேட்டவலம் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று காரின் முன் பகுதியில் புகை வந்து, மளமளவென தீப்பற்றிக் கொழுந்து விட்டு எரிந்தது.

உடனடியாக காரில் இருந்த பொருட்களுடன், காரின் உரிமையாளரும் இறங்கியுள்ளார்.தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments