பஞ்சாபில் மருத்துவமனையில் இருந்து கோவிட் பாதித்த 13 பயணிகள் தப்பியோட்டம்.. திரும்பி வராவிட்டால் பாஸ்போர்ட் முடக்கம் என எச்சரிக்கை.!

0 2081

பஞ்சாபில் கோவிட் பாஸிட்டிவ் உறுதி செய்யப்பட்ட 13 பேர் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்று விட்டதால், அவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

19 குழந்தைகள் உட்பட 179 பயணிகளுடன் மிலன் நகரில் இருந்து அமிர்தசரசுக்கு வந்த வெளிநாட்டு விமானத்தில் பயணிகளிடம் சோதனையிடப்பட்டது. அப்போது 125 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதில் பெரும்பாலோர் ஒமைக்ரான் தொற்றாலும் பாதிக்கப்பட்டிருந்தனர்.அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது.இந்நிலையில் 13 பயணிகள் பூரணமாக குணமாகாத நிலையில் மருத்துவமனையில் இருந்து வெளியேறி விட்டனர்.

அவர்கள் இன்று காலைக்குள் திரும்பி வராவிட்டால் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும் என்றும் நாளிதழ்களில் அவர்களின் படத்தோடு எச்சரிக்கை விடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments