தொழிலதிபரை கத்தியால் தாக்கி ரூ.2கோடி பணம் கொள்ளையடிக்க முயன்ற நபர்கள் கைது

0 2591
தொழிலதிபரை கத்தியால் தாக்கி ரூ.2கோடி பணம் கொள்ளையடிக்க முயற்சி

சென்னையில் பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து தொழிலதிபரை கத்தியால் தாக்கி, 2 கோடி ரூபாயை கொள்ளையடிக்க முயன்ற நபர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்தனர்.

சௌகார்பேட்டையைச் சேர்ந்த கைலாஷ் ஜெயின் என்பவரின் மின்சாதன பொருள் விற்பனையகத்திற்கு கடந்த 3-ந் தேதி வந்த மர்ம நபர்கள் 5 பேர் கைலாஷையும் அவரது தம்பியையும் கத்தியால் தாக்கி, லாக்கரில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்தனர்.

அதற்குள் அக்கம்பக்கத்தினர் ஒன்றுகூடியதால், அவர்கள் தப்பியோடி விட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளை வைத்து 5 பேரையும் கைது செய்தனர்.

கைதானவர்களில் முகமது ஆசிக் என்பவன், கைலாஷ் ஜெயினின் மற்றொரு கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்த நிலையில், பணம் இருப்பதை அறிந்து நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments