பொங்கல் பரிசு தொகுப்பினை ஜன.31 வரை பெற்றுக் கொள்ளலாம் ; அமைச்சர் சக்கரபாணி

பொங்கல் பரிசு தொகுப்பினை இம்மாதம் 31 ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பை வருகிற 10 ஆம் தேதி வரை டோக்கன்கள் அடிப்படையில் பெற்றுக் கொள்ளலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி இருக்கிறார்.
வருகிற 9 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கின் காரணமாக விடுமுறை என்பதால், மக்கள் தங்களுக்கு தெரிவிக்கப்படும் நாட்களில் பெற்றுக் கொள்ள கேட்டுக்கொண்டுள்ளார்.
தவிர்க்க இயலாத காரணத்தால் தொகுப்பினைப் பெற இயலாதவர்கள் இம்மாதம் 31 ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். இத்திட்டத்தில் ஏதேனும் தவறு ஏற்பட்டால், தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.
Comments