இத்தாலியில் இருந்து விமானத்தில் பஞ்சாப் வந்த 125 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

0 2518
இத்தாலியில் இருந்து விமானத்தில் பஞ்சாப் வந்த 125 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

இத்தாலியில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையம் வந்த பயணிகள் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

போர்ச்சுக்கலை சேர்ந்த இரோ அட்லான்டிக் ஏர்வேஸ் என்று நிறுவனத்தின் விமானத்தில் இத்தாலியின் மிலன் நகரில் இருந்து, 179 பயணிகள் அமிர்தசரஸ் வந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 125 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்தாலியில் பரிசோதனையில் செய்த போது நெகட்டிவ் என்று இருந்த நிலையில் தற்போது எப்படி பாசிட்டிவ் என்று முடிவு வந்துள்ளது என்று பயணிகள் பலர் கேள்வி எழுப்பினர். கொரோனா தொற்று உறுதியான பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments