மகாராஷ்டிரத்தில் காவல்துறையினரில் 55 வயதுக்கு மேற்பட்டோர் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தல்

0 2230

மகாராஷ்டிரத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினரில் 55 வயதுக்கு மேற்பட்டோர் வீட்டில் இருந்தே பணியாற்றும்படி உள்துறை அமைச்சர் திலீப் வல்சே பாட்டீல் அறிவுறுத்தியுள்ளார்.

மகாராஷ்டிர அரசு வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை மதித்து இவ்வாறு அறிவுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

55 முதல் 58 வயது வரையுள்ளோரின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு பொதுமக்களிடம் தொடர்பு இல்லாத, குறைவான தொடர்புள்ள இடங்களில் அவர்களைப் பணியமர்த்துவது பற்றியும் டிஜிபி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments