பைக்கில் வீலிங் சாகசத்தில் ஈடுபட்டு மாணவிகள் முன் மண்ணை கவ்விய இளைஞர்கள்

0 6413

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பைக்கில் வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மாணவிகள் முன் கீழே விழுந்து மண்ணை கவ்விய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அழகப்பா கல்லூரி சாலையில், விலையுயர்ந்த பைக்கான டியூக் பைக்கில் வந்த இளைஞர்கள் இருவரும் வரும் வழியில் பேருந்து நிறுத்தம், சாலையோரங்களில் பெண்கள் நிற்பதை பார்த்து கவனத்தை ஈர்ப்பதற்காக பைக்கில் வீலிங் சாகசம் செய்து வந்தனர்.

அதேபோன்று, கோட்டையூர் பகுதியிலும் சில பள்ளி மாணவிகள் நிற்பதை பார்த்து சாகசம் செய்ய முயன்ற இருவரும் கீழே விழுந்து மண்ணை கவ்வினர்.

கீழே விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டல என்பதற்கு போல இருவரும் வேகமாக எழுந்து எதுவுமே நடக்காதது போல் சிரித்துக் கொண்டே பில்டப் காட்டினர்.

இளைஞர்கள் இருவரும் காயமின்றி தப்பிய நிலையில், பைக் மட்டும் லேசாக சேதமடைந்தது. இந்த நிலையில், குறிப்பிட்ட பைக் பதிவு எண்ணை வைத்து போலீசார் இளைஞர்களை தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments