தகுதியானவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய அரசு தயார் ; கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி

தகுதியானவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய அரசு தயார்
தகுதியானவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, தகுதியான 13 லட்சத்து 40 ஆயிரம் நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
20 லட்சம் நபர்கள், 40 கிராமிற்கு மேல் நகை அடகு வைத்திருப்பவர்கள் என குறிப்பிட்ட அவர், அவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் என கூறவில்லை என்றார்.
ஒரே ஆதார் அட்டையை வைத்து பலர் கடன்கள் பெற்றுள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தள்ளுபடி அளிக்க முடியுமா? என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
Comments