புதுச்சேரியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு

0 17376
புதுச்சேரியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு

புதுச்சேரியில் வருகிற 31ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என அறிவித்த அம்மாநில அரசு, கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், அனைத்து வகை உணவகங்கள், மதுபான பார்கள், கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகள், இசை, கலை நிகழ்ச்சிகளில் 50% இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களில் 50% இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து வர வேண்டும் என்றும், கோவில் கும்பாபிஷேக விழாக்கள் பக்தர்கள் இன்றி, கோவில் பணியாளர்களுடன் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து இயங்க புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments