ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ள ஜோகோவிச்சிற்கு ஆதரவாக ரசிகர்கள் திரண்டு கோஷம்

0 5948
ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ள ஜோகோவிச்சிற்கு ஆதரவாக ரசிகர்கள் திரண்டு கோஷம்

ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ள டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்-சிற்கு ஆதரவாக அவர் தனிமைபடுத்தப்பட்டுள்ள விடுதிக்கு வெளியே ரசிகர்கள் நடனமாடி கோஷம் எழுப்பினர்.

கொரோனா தடுப்பூசி செலுத்தியது குறித்து மெளனம் காத்து வரும் ஜோகோவிச், ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பதற்காக தடுப்பூசி செலுத்துவதில் இருந்து பிரத்யேக விலக்கு வாங்கியிருந்தார்.

ஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் ஜோகோவிச்-சிற்கு போட்டி அமைப்பாளர்கள் வழங்கிய சிறப்பு விலக்கு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மெல்போர்ன் விமான நிலையம் வந்தடைந்த ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்த எல்லை பாதுகாப்பு படையினர் அவர் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டனர். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக ஜோகோவிச் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments