''வைகுண்டத்திற்கு சாலை''.. கிருஷ்ண பரமாத்மாவிடம் அனுமதி வாங்கிட்டீங்களா? ஓபிஎஸ்-ன் நகைச்சுவைக் கேள்வி.? அமைச்சர் எ.வ.வேலுவின் சுவாரஸ்ய பதில்..!
வைகுண்டத்திற்கு மட்டுமல்ல சிவலோகத்திற்கு செல்வதற்கு கூட வழி அமைப்பார் அமைச்சர் சேகர்பாபு என பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலுவின் பதிலால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
சேலம் கோழிக்கால்நத்தம் - வடுகப்பட்டி - வைகுந்தம் சாலை விரிவாக்கம் செய்வது தொடர்பான விவாதத்தின் போது, வைகுண்டத்திற்கு சாலை அமைக்க கிருஷ்ண பரமாத்மாவிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா ஒ.பன்னீர்செல்வம் நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு,இந்து சமய அறநிலை துறை அமைச்சராக இருக்கக் கூடிய சேகர்பாபு வைகுண்டம் மட்டுமல்ல சிவலோகத்திற்கு போவதற்கான அனைத்து பணிகளையும் ஆன்மீக வழியில் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
Comments