விதியை மீறி பிதான் நகர் ரயில் நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

0 1695
பிதான் நகர் ரயில் நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

மேற்கு வங்கத்தில் கொரோனா பரவலை தடுக்க, ரயில்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விதியை மீறி பிதான் நகர் ரயில் நிலையத்தில் தனிநபர் இடைவெளியின்றி ஏராளமானோர் கூட்டம் கூட்டமாக குவிந்ததோடு, ரயிலில் தொங்கியபடி பயணித்தனர்.

அனைத்து உள்ளூர், புறநகர் ரயில் சேவைகள் இரவு 7 மணி வரையில் 50%பயணிகளுடன் செயல்பட வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் மேற்கு வங்க மாநிலத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில், ரயில் நிலையங்கள் அலைமோதிய கூட்டத்தால், ரயில்கள் இயக்கப்படும் நேரம் இரவு 7 மணியில் இருந்து 10 மணி வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments