ஒரு வயது குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 75 சவரன் நகைகள் கொள்ளை

0 2428
கத்திமுனையில் 75 சவரன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் கொள்ளை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே, நள்ளிரவில் ஒரு வயது குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி 75 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சத்தியபுரத்தை சேர்ந்த கோபி, குடும்பத்தினருடன் வழக்கம் போல் அவரது வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், கோபியின் குழந்தை யுவாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பீரோவில் இருந்த 75 சவரன் நகை, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், வெள்ளிப்பொருட்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கோபி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு மேற்கொண்ட மேலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments