சபரிமலைக்கு சென்ற பிந்துவை அடித்து துவைத்த நபர்… கேரள போலீஸ் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று கதறல்

0 67758

சபரிமலைக்கு சென்ற இரண்டு பெண்களில் ஒருவரான பிந்து அம்மினியை கோழிக்கோட்டில் மர்மநபர் ஒருவர் சராமரியா தாக்கினார்.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, கடந்த 2019ஆம் ஆண்டு சபரிமலை கோயிலில் முதன்முதலில் தரிசனம் செய்த இரண்டு பெண்களில் பிந்து அம்மினி என்பவரும் ஒருவர். பிந்து அம்மினி சபரிமலை சென்ற பிறகு அடிக்கடி அவர் தாக்குதலுக்குள்ளாவது உண்டு.

வழக்கறிஞரான அவர், தன்னுடைய வழக்கு தொடர்பாக கோழிக்கோடு சென்றுள்ளார். கோழிக்கோடு வடக்கு கடற்கரைக்கு சென்ற அவரை மர்ம நபர் ஒருவர் கழுத்தை பிடித்து இழுத்து கீழே தள்ளி சராமரியாக அடித்தார்.

இந்த காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிந்து கூறுகையில், தனக்கு ஏதாவது நடைபெறும் என்று உள்மனது சொன்னதாகவும் அதனால், கொயிலாண்டி போலீசாரிடத்தில் பாதுகாப்பு கேட்டதாவும் ஆனால், அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும், தன்னை தாக்கிய நபரை கைது செய்துள்ள போலீசார் ஜாமீனில் வெளி வரக் கூடிய சாதாரண வழக்கையே பதிவு செய்துள்ளனர் என்றும் தனக்கு கேரள போலீசிடத்தில் இருந்து நீதி கிடைக்காது என்றும் பிந்து கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments