தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் - முதலமைச்சர்

0 2780

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவிலேயே முற்றுப்புள்ளி வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அண்மைகால தற்கொலை சம்பவங்களை சுட்டிக்காட்டி, அதிமுக எம்.எல்.ஏ. வைத்தியலிங்கம் சட்டப்பேரவையில் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததாக முதலமைச்சர் குறிப்பிட்டார். இதனை அடுத்து, அத்தீர்ப்பிற்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், நீதிமன்றமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில், விரைவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு நிச்சயம் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என முதலமைச்சர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments