அபாச்சே தாக்குதல் ஹெலிகாப்டர்களின் ஒருங்கிணைந்த பயிற்சி: வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இந்திய விமான படை தகவல்

0 2207

'அபாச்சே' தாக்குதல் ஹெலிகாப்டர்களின் ஒருங்கிணைந்த பயிற்சி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக  இந்திய விமான படை தெரிவித்துள்ளது.

இந்த பயிற்சியின் போது அபாச்சே ஹெலிகாப்டர்களின் கட்டுப்பாடான இயக்கமும் அவ்வாறு இயக்கும் போது ஹெலிகாப்டர்களுக்கு இடையேயான தகவல் தொடர்பு குறித்து உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வானில் பறந்தபடி தாக்குதலில் ஈடுபடும் அபாச்சே ஹெலிகாப்டர்கள், தரையில் இருந்து செயல்படும் ராணுவ கவச வாகனங்கள் மற்றும் ராணுவ படையினருடனான தகவல் தொடர்பு உள்ளிட்டவையும் வெற்றிகரமாக உறுதி செய்யப்பட்டதாக இந்திய விமான படை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments