இந்தியா - பாகிஸ்தான் கொடியிறக்கும் நிகழ்வில் பொதுமக்கள் பங்கேற்க தடை

0 1773

இந்தியா - பாகிஸ்தான் எல்லையான வாகாவில் தினந்தோறும் நடக்கும் இரு நாடுகளின் கொடியிறக்க நிகழ்வில் பொதுமக்கள் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாக எல்லை பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரிப்பது மற்றும் ஒமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு, இந்த நிகழ்வில் பொதுமக்கள் பங்கேற்க தடை விதிப்பதாக கூறப்பட்டுள்ளது. நாள்தோறும் வாகா எல்லையில் இரு நாட்டு கொடிகள், ராணுவ வீரர்கள் மிடுக்கான அணிவகுப்பு மரியாதையுடன் இறக்கப்படும்.

இதனை காண இருநாடுகளிலும் இருந்தும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். இந்த நிலையில், கொரோனா பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடியிறக்கும் நிகழ்வில் பொதுமக்கள் பங்கேற்க தடை விதிப்பதாக எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை கடந்த நவம்பர் மாதம் நீக்கப்பட்ட நிலையில், மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments