முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்

0 2746

மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, வருகிற 20-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கர்நாடாகவில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை விசாரணைக்கு பின்னர் போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளதால் கைதை தள்ளிவைக்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தரப்பிலிருந்து வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பட்டது. இதையடுத்து ராஜேந்திர பாலாஜியை வரும் 20ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து அவர் மதுரை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜியை தங்கள் காவலில் எடுக்க விசாரிக்க போலீசும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments