இமாச்சல் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு.. சுமார் 300 சாலைகள் அடைப்பு

0 1670

இமாச்சல பிரதேசத்தின் பல இடங்களில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவால், சுமார் 300 சாலைகள் அடைக்கப்பட்டு, போக்குவரத்து முடங்கியுள்ளது.

மணாலிக்கு அருகிலுள்ள அடல் சுரங்கப்பாதையின் தெற்கு வாசலில் கிட்டத்தட்ட 4 அடி அளவிற்கு உறைபனி காணப்படுகிறது. லாஹௌல் மற்றும் ஸ்பிதியில் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் பல இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

உறைபனியால் சாலைகள் மிகவும் வழுக்கும் நிலையில் இருப்பதால், சிம்லாவில் வாகன போக்குவரத்தை தவிர்க்குமாறு சுற்றுலா பயணிகளுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. பனிப்பொழிவால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments