ஹைபர்சோனிக் வகை ஏவுகணை சோதனை செய்ததாக வட கொரியா செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0 1661

ஹைபர்சோனிக் வகை ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்து பார்த்ததாக வட கொரியா அரசு தெரிவித்துள்ளது.

ஏவுகணை சோதனை குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வட கொரிய அரசின் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்ததாகவும், இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாகவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் சென்று தாக்கும் சக்தி கொண்டதாகவும், 720 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த இலக்கை ஏவுகணை தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments