திருவள்ளூரில் அரசுப் பள்ளி கட்டட சீரமைப்பு பணியில் முறைகேடு.. ஒன்றியக் குழு உறுப்பினர் கைது.!

0 1252

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி வெண்மனம்புதூர் கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளியின் கட்டட சீரமைப்பு பணியில் முறைகேடு செய்ததாக ஒன்றியக் குழு உறுப்பினரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் சிதிலமடைந்த வடக்கு பகுதி வகுப்பறையை அகற்றுவதற்கு பதில் கிழக்கு பகுதியை இடித்து அதிமுக உறுப்பினர் சுரேஷ் முறைகேட்டில் ஈடுபட்டதாக கிடைத்த புகாரை தனிப்படை போலீசார் விசாரித்தனர்.

தலைமறைவாக இருந்த சுரேசை தேடி வந்த போலீசார் திருப்பதியில் இருந்து நண்பர்களுடன் திரும்பிய போது அவரை கைது செய்ததாக தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments