5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதிகள் ஓரிரு நாட்களில் வெளியாக வாய்ப்பு

0 1447

மணிப்பூரில் தேர்தல் ஆணையம் காணொலி வாயிலாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து தேர்தலுக்கான ஆய்வுகள் நிறைவு பெற்றன.

விரைவில் 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட உள்ளது.உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் , கோவா மற்றும் மணிப்பூரில் தேர்தலை நடத்துவதற்கு தேவையான துணை ராணுவப் படை பாதுகாப்பு குறித்தும் தேர்தல் அதிகாரிகள் உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு சுகாதாரத்துறை அமைச்சகத்துடனும் தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவை பாதுகாப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிப்பது, பிரச்சாரக் கூட்டங்களுக்குத் தடை விதிப்பது பற்றியும் தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments