ஜம்மு காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு.. நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்ல முடியாமல் பயணிகள் குளிரில் பரிதவிப்பு

0 1347

ஜம்மு காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் சாலைகளில் பனி மூடி பாதைகள் அடைபட்டு விட்டன.

ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை உள்பட நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இதனால் ஊருக்குத் திரும்ப முடியாமல் ஆங்காங்கே கடும் குளிரிலும் பனியிலும் மைனஸ் 8 டிகிரி வெப்ப நிலையில் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சாலைகளில் பனிமூடியதால் வாகனங்கள் பல மணி நேரம் காத்திருக்கின்றன. விமானங்கள் ரத்தானதால் ஏராளமான பயணிகள் ஸ்ரீநகர் விமானநிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இரண்டு விமானங்கள் மட்டுமே அங்கிருந்து புறப்பட்ட நிலையில் 80க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments