குடியாத்தத்தில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது

0 1796

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

குடியாத்தம் நான்கு முனை பகுதியில் வாகன சோதனை மேற்கொண்ட போலீசார், அவ்வழியாக வந்த 3 நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்தது.

இதையடுத்து, ஜலில், அஷாம்பாஷா, அஹமத்பாஷா என 3 பேரை கைது செய்த போலீசார், 400 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும், நகைக்கடை உரிமையாளர்களான ராஜேஷ்குமார், நவரத்தன்குமார் உட்பட 3 பேரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments