போலீசார் எனக் கூறி நூதன முறையில் மூதாட்டியிடம் கைவரிசை.. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இருவரை தேடும் போலீசார்.!

நெல்லையில், சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் போலீஸ் எனக் கூறி நூதன முறையில் 14 சவரன் தங்க நகைகளை திருடி சென்ற இருவரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஜெபாகார்டன் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி வேலம்மாளிடம் போலீஸ் எனக் கூறி அறிமுகமான 2 பேர், தங்க நகைகளை அணிந்து கொண்டு வெளியே வரக் கூடாது என்றும், நகைகளை கழற்றிப் பையில் வைத்து செல்லுமாறும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி, பையில் வைத்திருந்த 14 சவரன் நகைகளை இருவரும் கொள்ளையடித்து தப்பினர்.
Comments