கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு.!

0 2946

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 10 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் நிலையில், கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழலையர் காப்பகங்கள் தவிர மழலையர் விளையாட்டுப் பள்ளிகள், நர்சரிப் பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பள்ளிகளிலும் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. பொதுத் தேர்வு எழுதும் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு, தனியார், மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் தவிர அனைத்துக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20 ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்படுகிறது.

பயிற்சி நிலையங்கள் செயல்பட தடை விதிக்கப்படுவதுடன், பொருட்காட்சிகள் மற்றும் புத்தக கண்காட்சிகள் நடத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொது பேருந்துகள் மற்றும் புறநகர் ரயில்களில் உள்ள இருக்கைகளில் 50 சதவீத பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பகிறது.

மெட்ரோ ரயிலில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது. அனைத்து பொழுதுபோக்கு கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை விதிக்கப்படுகிறது. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும் என அரசு அறிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments