வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு

0 2565

தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி ஊரடங்கு அமலில் இருக்குமென அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் செயல்பட அனுமதி இல்லை.

மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள் போன்ற மருத்துவம் சார்ந்த பணிகள், ஏடிம் மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும், எரிபொருள் வாகனங்கள் இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும்.

பெட்ரோல், டீசல் பங்குகள் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். இரவு நேர ஊரடங்கின் போது பணிக்கு செல்லும் பணியாளர்கள் தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் விட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்துமாறு தொடர்புடைய நிறுவனங்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

விமானம், ரயில், பேருந்து நிலையங்களூக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும். அவ்வாறு பயணிக்கும் போது பயணச்சிட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments