அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து... 7 குழந்தைகள் உள்பட 13 பேர் உடல் கருகி உயிரிழப்பு

0 2605

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உள்பட 13 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பிலடெல்பியா நகர 3 மாடி குடியிருப்பில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நாலாபுறமும் பரவி கொளுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வரும் போராட்டத்தில் வீரர்கள் ஈடுபட்டனர்.

அதிகாலையில் விபத்து ஏற்பட்டதால் தூங்கிக் கொண்டிருந்த 7 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்ததாகவும், படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments