கொரோனா பரவல் எதிரொலி - கைதிகளுடன் உறவினர்கள் மாதம் இருமுறை மட்டுமே சந்திக்கலாம்.!

0 2019

கொரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து மற்ற இடங்களைப் போல தமிழக சிறைச்சாலைகளிலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. 

இதுகுறித்து சிறைத்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில், சிறைவாசிகளைக் காண மாதம் இரு முறை மட்டுமே நேர்காணல் நடத்தப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நேர்காணலுக்கான நேரம் ஒதுக்கப்படும் என்றும், நேர்காணலின்போது 1 பார்வையாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிறைவாசிகளைக் காண வருபவர்கள் இரண்டு முறை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று அல்லது கொரோனா நெகட்டீவ் சான்றை கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்திலுள்ள கிளைச் சிறைகள் மற்றும் சிறப்பு கிளைச் சிறைகளில் நேர்காணலுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments