சென்னையில் காலை 5:30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில் சேவை

0 2535
இனி வார நாட்களில் தினமும் காலை 5:30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இனி வார நாட்களில் தினமும் காலை 5:30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாகத் தமிழக அரசின் அறிவுறுத்தலின் படி மெட்ரோ ரயில் சேவை நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில் 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன.

மேலும், அனைத்து முனையங்களில் இருந்தும் கடைசி மெட்ரோ ரயில் இரவு 9 மணிக்குப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு காரணமாக மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments