பிரதமரின் மாற்றப்பட்ட பயண திட்டத்தை தெரிவிக்கவில்லை - பஞ்சாப் முதலமைச்சர்

0 3474

பிரதமர் மோடி பெரோஸ்புர் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு டெல்லி திரும்பியது வருத்தம் அளிப்பதாக பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித்சிங் சன்னி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவருடன் தான் நெருங்கிய தொடர்பில் இருந்த காரணத்தால் பிரதமரை வரவேற்க பதின்டா விமான நிலையம் செல்லாமல் அமைச்சரை அனுப்பி வைத்ததாக கூறினார்.

வானிலை சரியில்லாத காரணத்தால் பிரதமரின் பயணத்தை ரத்து செய்ய வலியுறுத்தியதாகவும், மாற்றப்பட்ட சாலை பயணம் குறித்து தங்களிடம் தெரிவிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு இருந்தால் அது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் சரண்ஜித்சிங் சன்னி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments