திருவொற்றியூரில், குடிசை மாற்று வாரிய வீடுகள் உள்ள மற்றொரு கட்டிடத்தை இடிக்கும் பணிகள் தொடக்கம்

0 1345
சென்னை திருவொற்றியூரில், குடிசை மாற்று வாரிய வீடுகள் உள்ள மற்றொரு கட்டிடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

சென்னை திருவொற்றியூரில், குடிசை மாற்று வாரிய வீடுகள் உள்ள மற்றொரு கட்டிடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

திருவெற்றியூர் கிராம தெருவில் உள்ள அருவா குளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், D பிளாக்கில் உள்ள 24 வீடுகள் கடந்த 27 தேதி காலை இடிந்து விழுந்தன. அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஜெயா தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் அங்கு ஆய்வு செய்ததில், அருகேயுள்ள 24 வீடுகள் கொண்ட கட்டிடமும் பழுதடைந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த கட்டிடத்தையும் இடிக்க உத்தரவிடப்பட்ட நிலையில், ஜேசிபி இயந்திரம் மூலம் கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது.

அருகிலுள்ள குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வீடுகளில் இருப்பவர்களை காலி செய்துவிட்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்புடன் கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments